ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லுக்கே வேற லெவல்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவின் 'கஸ்டடி' பட ஃபர்ஸ்ட் லுக்!

லுக்கே வேற லெவல்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவின் 'கஸ்டடி' பட ஃபர்ஸ்ட் லுக்!

கஸ்டடி திரைப்படம்

கஸ்டடி திரைப்படம்

Custody | தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.'கஸ்டடி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

    'உலகில் நாம் காண விரும்பும் மாற்றமாக மாறுவோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாக சைதன்யா..வேட்டை ஆரம்பிக்கட்டும்!' என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் அந்தப் படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

    பாலிவுட் நடிகை திஷா பதானியின் ஹாட் போட்டோஸ்!

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தமிழ் திரையில் பிரபல இயக்குநராகவும், வெற்றி இயக்குநராகவும் அறியப்படும் வெங்கட்பிரபு, தற்போது நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதனால் கதை விவாதத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் என கூறுகின்றனர்.

    மேலும், இந்தப் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றன.

    "நான் கதைகளை எழுதுவதில்லை ; திருடுகிறேன்"- பாகுபலி எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத்!

    கஸ்டடி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தில் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெங்கட் பிரபுவிற்கு 11-வது படம், அதேபோல் நாக சைதன்யாவுக்கு 22 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

    Published by:Srilekha A
    First published:

    Tags: Tamil Cinema, Venkat Prabhu