ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வெந்து தணிந்தது காடு' எத்தனை கோடி லாபம் தெரியுமா? உதயநிதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்!.

'வெந்து தணிந்தது காடு' எத்தனை கோடி லாபம் தெரியுமா? உதயநிதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்!.

உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்

உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்

தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வெளியிட்ட உதயநிதியை சந்தித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  சிம்புவின் நடிப்பு இந்த படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. அவருக்கு ஜோடியாக இடம்பெற்றுள்ள சித்தி இத்னானி ரசிகர்களை கவர்ந்தார். வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லாமும் சரியாக அமைந்த படம் என்பதால் ரசிகர்களை கவர்ந்தது வெந்து தணிந்தது காடு.

இதன் காரணமாக தமிழகத்தில் அந்த திரைப்படம் சுமார் 10 கோடி ரூபாய் ஷேர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விவாகரத்து முடிவை மாற்றிய தனுஷ்- ஐஸ்வர்யா? வெளியான புதிய தகவல்!

இந்த நிலையில் தமிழகத்தில் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் ஷேர் கொடுத்துள்ளது என்று சொல்லப்படும் நிலையில்,  தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக தயாரிப்பாளருக்கு 19 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது என சினிமா துறையில் கூறுகின்றனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Silambarasan, Udhayanidhi Stalin