முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Vendhu Thaninthathu Kaadu Movie Review: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் விமர்சனம்!

Vendhu Thaninthathu Kaadu Movie Review: சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் விமர்சனம்!

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிலம்பரசன் - ஏ.ஆ.ரஹ்மான் - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிலம்பரசன் - ஏ.ஆ.ரஹ்மான் - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பை செல்லும் முத்து என்ற 21 வயது இளைஞனின் வாழ்க்கை பின்னணியில் வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்துள்ளார் கவுதம் வாசுதேவ் மேனன்.

கல்லூரி முடித்துவிட்டு ஊரிலேயே வேலை செய்யும் முத்துவின் கோவம் அவனை கொலைகாரானாக மாற்றிவிடும் என்று தாய் ராதிகா பயப்படுகிறார். இதனால் தனக்கு தெரிந்தவர் மூலம் அவரை மும்பைக்கு அனுப்ப முயற்சிக்கிறார். அன்று இரவு நடக்கும் ஒரு சம்பவத்தால் முத்து கையில் துப்பாக்கி வருகிறது. அதை எடுத்து எப்போது சுடப்போகிறார் என்ற இடத்தை நோக்கி முதல் பாதி நகர்கிறது.

இந்த கதையில் இதுதான் நடக்க போகிறது என்பதை அடுத்தடுத்து யூகித்து கொள்ள முடிகிறது. மேலும் முத்துவின் வாழ்க்கையையும் மாற்றத்தையும் விரிவாக கூறுகிறேன் என காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

Also read... குரு பாக்யராஜின் உடையை போட்டு நடித்த சிஷ்யன் பார்த்திபன்

இந்தப் படத்தில் அடியாட்கள் எப்படி உருவாகிறார்கள்? அவர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள்? அவர்களின் சூழல் மற்றும் மனநிலை என்ன? அவர்கள் வாழ்க்கை எங்கு எப்படி முடியும் என்பதை திரைக்கதை வாயிலாக கடத்தியுள்ளனர்.

வெந்து தணிந்தது காடு கேங்ஸ்டர் படம். ஆனால் தமிழில் வெளியான நாயகன், சத்யா, பாட்ஷா போன்ற படங்களை நினைவு படுத்துகின்றன. ஆனால் அந்தப் படங்கள் போல் இருக்கிறதா என்பது வேறு விஷயம்.

கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் இடம்பெறும் ரொமான்ஸ் காட்சிகள் மிக குறைவு. ஆனால் இருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அதேபோல் வி.டி.வி படம் போலவே இந்தப் படத்திலும் தன்னை விட வயது அதிகமான பெண்ணையே காதலிக்கிறார் சிம்பு.

வெந்து தணிந்தது காடுவில் சிலம்பரசன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் 21 வயது இளைஞன் தோற்றத்திலும், இரண்டாம் பாதியில் கேங்கஸ்டருக்கான தோற்றத்திலும் நடித்திருக்கிறார். அவரைப் போலவே புதுமுக நாயகி சித்தி இத்னானிக்கு முதல் படம் போலவே தெரியவில்லை. சிலம்பரசனுடனான காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களை தவிர கர்ஜி, குட்டி கதாபாத்திரங்களும் மனதில் பதிகின்றன. மேலும் ஒளிப்பதிவு, இசை ஆகியவை ரசிக்க வைக்கின்றன. இருந்தாலும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஒரே இசை பின்னணியில் ஒலிக்கிறது. அத்துடன் முத்து வாழ்க்கையை கூறுகிறேன் என வைத்த பல காட்சிகளை நீக்கி நீளத்தை குறைத்திருக்கலாம்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குனராக வரும் சிம்பு, வி.டி.வி கணேஷ் இடம் ஹீரோ மும்பை சென்று கேங்ஸ்டர் ஆகிறான் என ஒரு கதையை கூறுவார். அந்த கதையை வெந்து தணிந்தது காடு என்ற முழு நீளப்படமாக எடுத்துள்ளார்.

இந்தப் படத்தை சிம்புவின் மாநாடு படத்திற்கு கீழும், கவுதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு மேலும் என மதிப்பிடலாம்.

இந்தப் படத்தின் இறுதியில் ஏற்கனவே சொன்னது போல் இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுக்கின்றனர். அது தேவையா என்று ஒரு முறை யோசிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbu