முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளியானது சிம்புவின் மல்லிப்பூ பாடல் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!

வெளியானது சிம்புவின் மல்லிப்பூ பாடல் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!

மல்லிப்பூ பாடல்

மல்லிப்பூ பாடல்

மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து மல்லிப்பூ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் வெளியானது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கடந்த 15-ம்தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.

சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 473 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம், மல்லிப்பூ ஆகிய படல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ம்ற்றும் தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பட்டாச்சார்யா இந்த பாடலை பாடியுள்ளார்.

' isDesktop="true" id="809748" youtubeid="MrzkoLKpgLU" category="cinema">

இந்நிலையில் மல்லிப்பூ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Simbhu