Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…

வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு…

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

மேக்கிங் வீடியோவில் சண்டை, பாடல் காட்சிகள், எடிட்டிங் உள்ளிட்டவை உருவான விதத்தை அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்கள் விவரித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முத்து என்ற கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பை சிம்பு வெளிப்படுத்தியுள்ளார்.

    சிம்புவின் நடிப்பு இந்த படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. அவருக்கு ஜோடியாக இடம்பெற்றுள்ள சித்தி இத்னானி ரசிகர்களை கவர்ந்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

    அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என தகவல்…

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன.

    இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சண்டை, பாடல் காட்சிகள், எடிட்டிங் உள்ளிட்டவை உருவான விதத்தை அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்கள் விவரித்துள்ளனர்.



    வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதை தொடர்ந்து, அடுத்த பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஃப்ளோரல் சாரியில் ஜான்வி கபூர் எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க!

    முதல் பாகத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இல்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர். இதுபற்றி விளக்கம் அளித்த சிம்பு, முத்து எப்படி டான் ஆகிறார் என்பதுதான் முதல் பாகம் என்றும், அடுத்த பாகத்தில் சண்டை மற்றும் மாஸ்ஸான சீன்கள் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி