ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘வெந்து தணிந்தது காடு’ சண்டைக்காட்சி – மேக்கிங் வீடியோ வெளியானது…

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘வெந்து தணிந்தது காடு’ சண்டைக்காட்சி – மேக்கிங் வீடியோ வெளியானது…

சண்டைக் காட்சியின்போது சிம்பு.

சண்டைக் காட்சியின்போது சிம்பு.

வெந்து தணிந்தது காடு படத்தின் இடைவேளைக் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதற்கு முன்பாக ஏற்படும் சண்டைக் காட்சி பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வெந்து தணிந்தது காடு படத்தில் இடைவேளைக்கு முன்பு இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சியை படக்குழுவினர் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளனர். இதுதொடர்பான மேக்கிங் வீடியோ வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

    சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றிருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. மொத்தம் 2 பாகங்களைக் கொண்டதாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Jailer: மாஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... வெளியானது ஜெயிலர் க்ளிம்ப்ஸ்!

    முதல் பாகத்தில் கிராமத்திலிருந்து மும்பைக்கு செல்லும் முத்து வீரனான சிம்பு, மும்பையில் எப்படி தாதா ஆகிறார் என்பது விவரிக்கப்பட்டிருக்கும். அடுத்த பாகத்தில் சிம்புவின் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெந்து தணிந்தது காடு படத்தின் இடைவேளைக் காட்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதற்கு முன்பாக ஏற்படும் சண்டைக் காட்சி பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை ஒரே ஷாட்டில் படக்குழுவினர் எடுத்துள்ளனர்.

    ' isDesktop="true" id="839996" youtubeid="Audh9lsELA8" category="cinema">

    இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சியின் மேக்கிங் வீடியோ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை சிம்பு தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    WATCH – கலகத் தலைவன் படத்தின் ‘ஸ்னீக் பீக்’ காட்சி…

    இதற்கிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். முதல் பாகத்தில் ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அதிக சண்டைக் காட்சிகளுடன் படம் மாஸாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Silambarasan