Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன் டைம் இதுதான்…

வெந்து தணிந்தது காடு சென்சார் சான்றிதழ் வெளியீடு… படத்தின் ரன் டைம் இதுதான்…

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெந்து தணிந்தது காடு படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று படத்தின் ரன் டைம் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது.

    விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    முன்னெப்போதுமில்லாத தோற்றத்தில், சிம்பு இந்த படத்தில் நடித்துள்ளார். 19 வயது இளைஞன் முதல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டர் கேரக்டர் வரை சிம்பு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.

    இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது. சென்சாருக்கு பின்னர் மொத்தம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடக் கூடியதாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்துள்ளது.



    இந்தப் படத்தில் சிம்புவுடன், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    சிறந்த நடிகருக்கான SIIMA விருதைப் பெற்ற சிம்பு… மாநாடு படத்திற்காக வழங்கப்பட்டது

    தற்போது இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 4.30-க்கு முதல்நாள் முதல் காட்சி 150க்கும் அதிகமான திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி