Home /News /entertainment /

‘ஒருசில விமர்சனங்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும்’ – கவுதம் மேனன்

‘ஒருசில விமர்சனங்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும்’ – கவுதம் மேனன்

கவுதம் மேனன்

கவுதம் மேனன்

மல்லிப்பூ பாட்டு உருவாக ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம். சிம்பு நான் எது கொண்டு வந்தாலும் ஏற்றுக்கொண்டார். – கவுதம் மேனன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஒருசில ரிவியூக்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும் என்று இயக்குனர் கவுதம் மேனன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் படக்குழுவினர் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கதாநாயகன் சிம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் கவுதம் மேனன் பேசியதாவது-

    தூங்கிட்டு வாங்க அப்படிணு சொன்னதை சமூக வலைத்தளங்களில் பெரிதாக போட்டுவிட்டனர். எனது மற்ற படங்களை விட இந்த படத்திற்கு அதிகமான நல்ல விமர்சனம் வந்துள்ளது. நெகடிவ் விமர்சனத்திற்கும் நன்றி‌. இதிலிருந்து கற்றுக்கொள்ள முடிகிறது.

    ‘அடுத்த பாகத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் வைக்க வேண்டும்’ – வெந்து தணிந்தது காடு பட விழாவில் சிம்பு கோரிக்கை

    ஒருசில ரிவியூக்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும். ஒரு படம் பண்ணுவது மிகவும் கடினமானது. படத்தை வெற்றிபெற வைத்தவர்களுக்கு நன்றி. சிம்புவுக்கு நன்றி.

    மல்லிப்பூ‌ பாட்டு உருவாக ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம். சிம்பு நான் எது கொண்டு வந்தாலும் ஏற்றுக்கொண்டார்.

    கரோனா நேரத்தில் ஒரு சிறிய படம்‌எடுக்கலாம் என்றேன். பிறகு வேறு ஒரு படம் சொன்னேன்‌. இப்போது இந்த படம் எல்லாவற்றிற்கும் சரி என்றார். கேமரா‌முன் நடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

    இவ்வாறு கவுதம் மேனன் பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி