Home /News /entertainment /

ரசிர்களின் வரவேற்பை பெறும் வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல்…

ரசிர்களின் வரவேற்பை பெறும் வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல்…

சிம்பு

சிம்பு

வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ரன் டைம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள மல்லிப்பூ லிரிக்கல் வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

    இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

    சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

    Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்!

    இந்த படத்திலிருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் என 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் 3ஆவது லிரிக்கல் வீடியோ பாடலாக மல்லிப்பூ பாடல் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ரன் டைம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Khushbu Sundar: லண்டனில் புது வீடு வாங்கிய குஷ்பு?

    கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படமும் இடம்பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood, Simbu

    அடுத்த செய்தி