Home /News /entertainment /

மனதை வருடும் ‘மறக்குமா நெஞ்சம்’– வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ்

மனதை வருடும் ‘மறக்குமா நெஞ்சம்’– வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ்

மறக்குமா நெஞ்சம் பாடலின் போஸ்டர்

மறக்குமா நெஞ்சம் பாடலின் போஸ்டர்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஏ.ஆர். ரகுமான் குரலில் வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த பாடலாக மறக்குமா நெஞ்சம் வெளியாகி லைக்ஸை அள்ளி வருகிறது.

    கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் ராதிகா சரத் குமார் இடம்பெற்றுள்ளார்.

    பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

    சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பரவலாக ரசிக்கப்பட்டடது.



    வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து காலத்திற்கும் நீ வேணும் என்ற பாடல் மற்றும் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழ் சினிமாவில் தேசபக்தி பாடல்கள்... சுதந்திர தினத்தில் கேட்க ப்ளேலிஸ்ட் இதோ...

    இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் என தொடங்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் 2வது பாடல் தற்போது வெளியாகி லைக்ஸை அள்ளி வருகிறது.



    பாடலைக் கேட்டவர்கள் அதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். யூடியூபில் மறக்குமா நெஞ்சம் பாடலுக்கு நெட்டிசன்கள் அளித்துள்ள கமென்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளன.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம்தேதி வெளியாகிறது. மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன், ரஹ்மான் கூட்டணியில் சிம்பு நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Silambarasan

    அடுத்த செய்தி