Home /News /entertainment /

"கடவுள் 2வது சான்ஸ் குடுத்தா அதை சிம்பு மாதிரி பயன்படுத்தனும்” - வெந்து தணிந்தது காடு ரெஸ்பான்ஸ்..

"கடவுள் 2வது சான்ஸ் குடுத்தா அதை சிம்பு மாதிரி பயன்படுத்தனும்” - வெந்து தணிந்தது காடு ரெஸ்பான்ஸ்..

வெந்து தணிந்தது காடு.

வெந்து தணிந்தது காடு.

Vendhu Thanindhadhu Kaadu | இந்த படம் ஹிட் இல்ல ஒரு பம்பர் ஹிட் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறியுள்ளார். இதன் அடுத்த பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ”கடவுள் 2வது சான்ஸ் குடுத்தா அதை சிம்பு மாதிரி பயன்படுத்தனும்” இப்படி சமூக வலைதளங்களில் சிம்பு ரசிகர்களால் அவருடைய கம் பேக் தொடர்பான மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது.

    வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. கொரொனா கால கட்டத்திற்கு பிறகு வெளிவந்த சிம்புவின் மாநாடு ஒரு மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்து மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு டிரெய்லரே ஒரு புது விதமான படமாக இது இருக்கும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் அமைந்தது. மேலும் இந்த படம் தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் தமிழகத்தில் சிம்புவின் மார்கெட்டை இந்த படம் விரிவடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பொதுவா தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டார் ஹீரோவுக்கான  மாஸ் காட்சிகள் என்று சொல்லக்கூடிய காட்சிகள் எதும் இல்லாத  கதையை தேர்ந்தெடுத்து சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தில் கிளிஷேவான மாஸ் காட்சிகள் இல்லை ஆனால் ஹீரோயிஸம் இருக்கிறது. ஒரு எளிமையான கதையின் மூலமும் ஹீரோயிஸத்தை காட்ட முடியும் என்று இந்த படம் மூலமாக சிம்பும், ஜிவிஎம்-ம் நிரூபித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருப்பது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய திரைக்கதை. அவர் எழுதிய திரைக்கதைய சிதைக்காத வண்ணம் கவுதம் மேனன் படமாக்கியுள்ளார்.

    Read More : ‘ஒருசில விமர்சனங்கள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளிப்போடுவது மாதிரி இருக்கும்’ – கவுதம் மேனன்


    கவுதம் மேனனின் ஸ்டைலிலேருந்து வெளியே வந்து எடுக்கப்பட்ட ஒரு படம் தான் வெந்து தணிந்தது காடு. முத்து என்ற கதாபாத்திரத்தில் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் சிம்பு. ஆங்காங்கே வரும் காதல் காட்சிகளில் மட்டும் இது ஒரு ஜிவிஎம் படம் என்பதற்கான டச் இருந்துகொண்டே இருப்பது தனி அழகாக அமைந்துள்ளது. அதே போல் ஏ ஆர் ரஹ்மான் வழக்கம் போல படத்திற்கு நல்ல பாடல்களையும் அற்புதமான பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.

    ”இந்த படம் ஹிட் இல்ல ஒரு பம்பர் ஹிட்” என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறியுள்ளார். இதன் அடுத்த பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு புதுவிதமான திரைக்கதையையும், தான் இதுவரை டிரை பண்ணாத ஒரு வகையான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து படத்தை வெற்றியடைய செய்துள்ள கவுதம் மேனனிற்கும் ‘கடவுள் இரண்டாவது சான்ஸ் கொடுத்தா அத கவுதம் மேனன் மாதிரி பயன்படுத்தனும்’ என்கிற மீம்ஸ் பொருந்தும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Movie review, Simbu

    அடுத்த செய்தி