Home /News /entertainment /

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்…. 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்…. 2-வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

ஆக்சன், த்ரில்லர் ஜேனரில் வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த முறை படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியிருப்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்துள்ளார்.

    தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் ராதிகா சரத் குமார் இடம்பெற்றுள்ளார்.



    லவ் மீ லிட்டில் லிட்டில் லிட்டில்... ஹேப்பி பர்த்டே சாரா அலி கான்!

    சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பரவலாக ரசிக்கப்பட்டடது.

    வெந்து தணிந்தது காடு படத்திலிருந்து காலத்திற்கும் நீ வேணும் என்ற பாடல் மற்றும் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.



    இந்த நிலையில் மறக்குமா நெஞ்சம் என தொடங்கும் படத்தின் 2வது பாடல் 14-ம்தேதி மாலை 6 மணி 21 நிமிடத்திற்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் ரஜினி - கமல்?

    இந்தப் பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். ஆக்சன், த்ரில்லர் ஜேனரில் வெந்து தணிந்தது காடு படம் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. சிம்பு தற்போது தனது அடுத்த படமான பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: AR Rahman, Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி