கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது..

கருப்பர் கூட்டம்  என்ற யூடியூப் சேனலின் நிர்வாகிகளான போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன், வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 15 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது..
வேலு பிரபாகரன்
  • Share this:
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம்  என்ற யூடியூப் சேனலின் நிர்வாகிகளான போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன், வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 15 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.அதன் பின்னர் இந்த வழக்கில் ஓட்டேரியைச் சேர்ந்த  சோமசுந்தரம்,   மறைமலை நகரைச்சேர்ந்த  குகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகிகளுக்கு ஆதரவாகவும் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியதாகவும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாரத் முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த சிவாஜி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் கைது செய்யச்சொல்லி புகார் அளித்தார்.


அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் மீது மத உணர்வை தூண்டி கலகம் ஏற்படுத்துதல், சாதி மத இன ரீதியாக பேசி பிரச்சனை தூண்டிவிடுதல், அசாதாரண சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரனிடம் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading