பிக்பாஸ் முகென் நடிக்கும் வேலன்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான்

பிக்பாஸ் முகென் நடிக்கும் வேலன்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான்

வேலன் ஃபர்ஸ்ட் லுக்

பிக்பாஸ் முகென் ஹீரோவாக நடிக்கும் ‘வேலன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட முகென் ராவ் தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த சீசனில் முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் பெற்று வின்னரானார்.  பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோ அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைத்தது.

‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் முகென் ராவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார் . ‘வெற்றி’ என்ற டைட்டில் உடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கடந்த 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வான அனு க்ரீத்தி வாஸ் நடிக்கிறார். மேலும் நடிகர் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி ‘வெற்றி’ திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து இரண்டாவதாக முகென் ராவ் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கவின் மூர்த்தி.கே இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கென்னடி கிளப் படத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.வேலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் வேட்டி சட்டை அணிந்து ஹீரோயினுடன் அமர்ந்துள்ளார் முகென். மேலும் இந்தப் படத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் என இரண்டு தோற்றங்களில் முகென் நடிக்க இருப்பதாகவும், ஜூன் மாதத்தில் படத்தை தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் கவின் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: