முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Veetla Vishesham: கர்ப்பமாக ஊர்வசி... ஆர்.ஜே.பாலாஜி - சத்யராஜின் வீட்ல விசேஷம்!

Veetla Vishesham: கர்ப்பமாக ஊர்வசி... ஆர்.ஜே.பாலாஜி - சத்யராஜின் வீட்ல விசேஷம்!

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

இன்று வீட்ல விசேஷங்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ஜூன் 17, 2022 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே.பாலாஜி தான் நடித்து இயக்கும் புதிய படமான வீட்ல விசேஷம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி, தேவி உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். LKG மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததோடு, தேசிய விருதையும் வென்றது. இதையடுத்து தமிழில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் நடிப்பதோடு, இயக்கவும் செய்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவருடன் இணைந்து சரவணன் என்பவரும் இப்படத்தை இயக்கியுள்ளார்.

என் தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள் - ட்விட்டரில் ஆச்சர்யப்படுத்திய தனுஷ்!

தற்போது இந்தப் படத்திற்கு வீட்ல விசேஷம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்நிலையில் இன்று வீட்ல விசேஷங்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ஜூன் 17, 2022 அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். போஸ்டரில் ஊர்வசிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

அடேங்கப்பா... பென்ஸ் காரை பரிசளித்த ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி - யாருக்குன்னு பாருங்க!

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை தயாரித்திருந்த போனி கபூர், அடுத்ததாக தமிழில் வீட்ல விசேஷங்க என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: RJ Balaji, Sathyaraj, Tamil Cinema