முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்ஜே பாலாஜி நடிப்பில், என்.ஜே சரவணன் இயக்கி உள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாசிட்டிவான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'Badhaai Ho' படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார்.  இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காமெடி திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது வசூலில் கலக்கி வருகிறது. அதன் அடிப்படையில் படம் வெளியான முதல் நாளிலேயே 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

அதைத்தொடர்ந்து இப்படம் இரண்டாவது நாளிலும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை வசூலித்து முன்னேற்றத்தில் இருக்கிறது. இந்த வசூல் விடுமுறை நாளான நேற்று இன்னும் அதிகரித்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் நேற்று 3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also read... தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம் படம்!

இந்நிலையில் வீட்ல விஷேசங்க திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் இதுவரை 6 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ள சூழலில் வசூல் இனி வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor sathyaraj, Entertainment, RJ Balaji