முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எங்களுக்கு வீட்டுல விசேஷம் திரைப்படம் தான் விக்ரம்.. அரங்கத்தை அதிர வைத்த ஆர்.ஜே பாலாஜி!

எங்களுக்கு வீட்டுல விசேஷம் திரைப்படம் தான் விக்ரம்.. அரங்கத்தை அதிர வைத்த ஆர்.ஜே பாலாஜி!

ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி

சத்யராஜை மீட்ட சுந்தர பாண்டியன் எனவும் ஆர்.ஜே.பாலாஜியை புகழ்ந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வீட்ல விசேஷம் திரைப்படம் Badhaai Ho திரைப்படத்தை விட பத்து மடங்கு சிறப்பாக இருக்கும் என இயக்குனர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் ஆர்.ஜே பாலாஜி மற்றும் NJ சரவணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த பதாய் ஹோ திரைப்படத்தை வீட்ல விசேஷம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஆர்.ஜே பாலாஜி, ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர்கள் P.வாசு, கே.எஸ்.ரவிக்குமார்,  சுந்தர்.சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  அதில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் இந்த  திரைப்படத்தை தாங்கள் எடுக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்தியில் வெளியான வெற்றியடைந்த பதாய் ஹோ திரைப்படத்தை விட இந்த திரைப்படம் 10 மடங்கு சிறப்பாக இருக்கும் என சுந்தர் சி தெரிவித்தார்.

அருண் விஜய் படம் தள்ளி போகிறதா?

அவர்களை தொடர்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி ”இந்த மூன்று இயக்குனர்கள் எந்த தயாரிப்பாளரையும் நஷ்ட படுத்தியது கிடையாது. இவர்களிடம் மக்கள் ரசிக்கும்படியான படங்களை எடுக்க கற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார். அதன் காரணமாகவே அவர்கள் மூவர் முன்னிலையில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டதாகவும் ஆர்.ஜே.பாலாஜி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் வெற்றியடைந்த பின் நான் சொந்த உழைப்பில் முன்னேறினேன், எனக்கு உதவ யாருமில்லை என கூறுவது வழக்கம்.  ஆனால் நான் அவ்வாறு கூறவில்லை.  என்னுடைய வெற்றிக்கு பலர் உதவியுள்ளனர் என ஆர்.ஜே. பாலாஜி கூறினார்.

திருப்பதியில் விதிமீறல் : மன்னிப்பு கேட்டு தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்!

இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்தப் பாடல் இதுவரை 40 ஆயிரம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  யூடியூப் வைரலுக்காக உருவாக்கப்படும் பாடல்கள் எங்களுக்கு தேவை இல்லை.  எப்போது கேட்டாலும் ரசிக்கக்கூடிய பாடல் மட்டுமே தேவை என தெரிவித்தார். மேலும் வீட்ல விசேஷம் திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் படம் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.  கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.  எங்களுக்கு வீட்டுல விசேஷம் திரைப்படம்தான் விக்ரம் என நகைச்சுவையாக பேசினார் பாலாஜி.

அதேபோல் நடிகர் சத்யராஜ், இந்த திரைப்படம் தன்னுடைய திரை வாழ்வில் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பாராட்டியதுடம், சத்யராஜை மீட்ட சுந்தர பாண்டியன் எனவும் ஆர்.ஜே.பாலாஜியை புகழ்ந்தார். அத்துடன் ஊர்வசி போல பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor sathyaraj, Kollywood, RJ Balaji, Tamil Cinema