முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உள்ளது’ – வீட்ல விசேஷம் படக்குழுவினர் பெருமிதம்

‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உள்ளது’ – வீட்ல விசேஷம் படக்குழுவினர் பெருமிதம்

வீட்ல விசேஷம் படத்தின் போஸ்டர்

வீட்ல விசேஷம் படத்தின் போஸ்டர்

Veetla Visesham : மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடந்த போது வீட்ல விசேஷம் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. – படக்குழு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக வீட்ல விசேஷம் படம் உள்ளதென படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

ஆர்ஜே பாலாஜி நடிப்பில், என்.ஜே சரவணன் இயக்கி உள்ள வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாசிட்டிவான விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த படம். சத்யராஜ், ஊர்வசி, ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும்இந்த படம் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படம் குறித்து மதுரை வந்த ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே சரவணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது-

இதையும் படிங்க - விக்ரம் படத்தின் வசூலை மேடையில் ஓபனாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின் 

வீட்ல விசேஷம் நிச்சயம் ஹிட் அடித்து உள்ளது. குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டு வந்துள்ளது இந்த படம். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உள்ளது.

கடந்த ஒரு ஆண்டுகளாக திரையரங்குகளில் 500 கோடி,  1000 கோடி பட்ஜெட்டுகளில்   ஹிட் ஆக கூடிய படங்கள் தான் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

குறைந்த பட்ஜெட்டில்நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு வெற்றி உறுதி. அவை வெற்றிகரமாக ஓடுகின்றன. குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க கூடிய படங்கள்.தற்போது குறைந்து உள்ளன.இந்த குறையை இந்த படம் போக்கியுள்ளது.

அம்மாஅப்பா இருவருக்கும் ஆசைக்கு வயதில்லை என இப்படம் கூறுகிறது. குடும்பத்தில் தாய், தந்தைஅண்ணன்தம்பி ஆகியோரிடையே  சகிப்பு தன்மையை வலியுறுத்தி உள்ளது இந்த படம்.

இதையும் படிங்க -  தெலுங்கு முன்னணி நடிகரை இயக்கப் போகும் வெற்றிமாறன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு 

தற்போதைய காலத்தில் பல திரைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன. ஆனால் இந்த படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படி உள்ளது.

தற்போது நகைச்சுவை நடிகர்கள் குறைந்து, கதாநாயகர்களே நகைச்சுவை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. காரணம் நகைச்சுவை தொடர்பான எழுத்தாளர்கள்,   எழுத்துகள்  குறைந்நு விட்டது.

மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடந்த போது இந்த படத்தை ரிலீஸ் செய்யவில்லை. பத்தோடு பதினொன்றாகவன்முறை தொடர்பான படங்களை போல் எடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Actor sathyaraj, RJ Balaji