வீரப்பன் குடும்பத்தார் நடிகர் யோகி பாபுவுக்கு வைத்த வேண்டுகோள்

யோகி பாபு

முதன் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு.

 • Share this:
  மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் குடும்பத்தார், நடிகர் யோகிபாபுவுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

  ஜோதிகா நடித்த 'ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் கதை எழுதி, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் புதிய படம் ‘வீரப்பன் கஜானா’. காடுகளின் பெருமையை வியப்புடனும் நகைச்சுவை உணர்வோடும் சொல்லும் இப்படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  அதுவும் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு. ஆம் முதன் முறையாக யூ-டியூபர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இதன் கதைக்கும், வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனாலும், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனராம். ஆகவே, யோகிபாபு நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: