வீரமே வாகை சூடும் வெளியீடு எப்போது? - அறிவித்தார் விஷால்

வீரமே வாகை சூடும்

இந்தப் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

 • Share this:
  வீரமே வாகை சூடும் படம் எப்போது திரைக்கு வருகிறது என்பதை விஷால் அறிவித்துள்ளார்.

  தொடர்ச்சியாக ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார் விஷால். அவரது நடிப்பில் எனிமி திரைப்படம் ஆயுதபூஜைக்கு வெளியாகிறது என அறிவித்திருந்தனர். அதையடுத்து து.பா.சரவணன் இயக்கத்தில் நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் வெளியாகிறது. தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன.

  ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் விஷாலுக்கு அடிபட்டது, எனிமி படத்தின் பேட்ச்வொர்க் படப்பிடிப்பு என சில தினங்கள் மட்டும் வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மற்றபடி தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்தனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மலையாள நடிகர் பாபுராஜ் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  ஆக்‌ஷன் என்டர்டெயினராக தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டிருக்கும் விஷால், டிசம்பரில் படம் திரைக்கு வரும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: