விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஷால் தனது சொந்த பேனரான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக, து.ப. சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வீரமே வாகை சூடும் படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் து.ப.சரவணனுக்கு இது முதல்படமாகும். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இவர்களுடன் யோபிபாபு, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 26-ம்தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று நடிகரும், வீரமே வாகை சூடும் படத்தின் தயாரிப்பாளர் விஷால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :
இந்தி திரையுலகை ஆக்கிரமிக்கும் தென்னிந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை!
இந்த படம் ரிலீசானதை தொடர்ந்து, துப்பறிவாளன் பாகம் 2 படத்திற்கு விஷால் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அவர் நடிப்பில், ஆர்யா வில்லனாக நடித்த எனிமி திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனால் ஹிட் படம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் விஷால் உள்ளார்.
இதையும் படிங்க :
தனுஷ் - ஐஷ்வர்யா விவாகரத்து செய்யவில்லை... தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா பரபரப்பு பேட்டி
யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. தற்போதுவரை திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.