இந்தியில் வீரம்... ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

”கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்”

news18
Updated: July 27, 2019, 1:13 PM IST
இந்தியில் வீரம்... ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பச்சன் பாண்டே போஸ்டர்
news18
Updated: July 27, 2019, 1:13 PM IST
வீரம் படத்தின் இந்தி ரீமேக் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ஹிட் அடித்த படம் வீரம். இந்தப் படத்தில் தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழில் ஹிட் அடித்த இந்தப் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பச்சன் பாண்டே என்ற டைட்டிலுடன் உருவாகியுள்ளது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கருப்பு லுங்கி, கழுத்தில் தங்கச் சங்கிலிகள், கையில் நுன்சாக் ஆயுதத்துடன் தோன்றியுள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார்.ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கும் இந்தப் படம் 2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தொடர்ந்து கன்னடத்திலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

வீடியோ பார்க்க: சூர்யாவுக்கு செக் வைக்கும் பிரபாஸ்

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...