• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரச பயங்கரவாதத்தின் பேரவலம் - ஜெய் பீமை பாராட்டிய திருமாவளவன்!

அரச பயங்கரவாதத்தின் பேரவலம் - ஜெய் பீமை பாராட்டிய திருமாவளவன்!

ஜெய் பீமை பாராட்டிய திருமாவளவன்

ஜெய் பீமை பாராட்டிய திருமாவளவன்

சூர்யா, மணிகண்டன், லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம், தமிழ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கியிருக்கும் ஜெய் பீம் படத்துக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். படத்தைப் பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தைப் பார்த்து, தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"சட்டம் - அது வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும். எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமேஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்" என அந்தப் பதிவில் கூறியுள்ளார்

ஞானவேல் இயக்கியிருக்கும் ஜெய் பீம் 1995 இல் நடந்த லாக்கப் மரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியினர் இந்த சமூகத்தாலும், காவல்துறையாலும் எப்படி அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்பதை நுட்பமாகவும், விரிவாகவும் படம் பேசுகிறது. நம்மில் ஒருசாரார் அநீதிக்கு தொடர்ந்து ஆளாகும் நிலையை பெரும்பான்மை மக்களின் கவனத்துக்கு ஜெய் பீம் கொண்டு வந்துள்ளது

Also read... Jai Bhim review: எப்படி இருக்கிறது சூர்யாவின் ஜெய் பீம் படம்...?

சூர்யா, மணிகண்டன், லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம், தமிழ், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். கதை, காட்சிகள், வசனம், நடிப்பு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக அமைந்த சிறந்த படமாக ஜெய் பீம் இருப்பதால் படத்தைப் பார்த்தவர்கள் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: