Home /News /entertainment /

வசந்தபாலன், ராதிகா இணையும் தலைமைச் செயலகம்!

வசந்தபாலன், ராதிகா இணையும் தலைமைச் செயலகம்!

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

ராதிகாவின் ராடன் நிறுவனம் ஸீ5 ஓடிடி தளத்துக்காக இதனை தயாரிக்கிறது. இந்த வெப் தொடர் அரசியலை அடிப்படையாகக் கொண்டு தயாராவதாக கூறப்படுகிறது.

வசந்தபாலன் முதல்முறையாக ராதிகாவுடன் இணைகிறார். வெப் தொடருக்காக இந்த புதிய கூட்டணி அமைந்துள்ளது.

வசந்தபாலன் என்றதும் அவரது வெயில், அங்காடித்தெரு படங்கள் நினைவுவரும். துரதிர்ஷ்டவசமாக இந்த இரு படங்கள் தவிர்த்து அவர் இயக்கிய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை. நல்ல விமர்சனங்களையும் பெறவில்லை. கடைசியாக வெளியான ஜெயிலும் ஏமாற்றத்தையே தந்தது. தற்போது அர்ஜுன்தாஸ் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து வசந்தபாலன் வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார். ராதிகாவின் ராடன் நிறுவனம் ஸீ5 ஓடிடி தளத்துக்காக இதனை தயாரிக்கிறது. இந்த வெப் தொடர் அரசியலை அடிப்படையாகக் கொண்டு தயாராவதாக கூறப்படுகிறது. ஸீ5 தமிழில் ஆழமாக வேரூன்ற நினைக்கிறது. இதற்காக திரைப்படங்கள், வெப் தொடர்கள் என அதிகளவில் தயாரிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது வசந்தபாலனையும் தங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது.

தளபதி 66-ல் ராஷ்மிகா மந்தனா, எஸ்.எஸ்.தமன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் என தயாரித்து வந்தது. சில படங்கள் நஷ்டமடைய படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தியவர் இப்போது ஓடிடி தளத்துக்கு வந்துள்ளார். வசந்தபாலன் வெப் தொடரை இயக்குவதும், தலைமைச் செயலகம் என்ற பெயரும் நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Vasanthabalan  join hands with Radhika Sarathkumar for Thalaimai Seyalagam web series, vasanthabalan born, vasanthabalan next movie, vasanthabalan arjun das, angadi theru, vasanthabalan instagram, aravaan, director vasanthabalan office address, prathinayakan, radhika sarathkumar, chaya sarathkumar, varalaxmi sarathkumar, rahul sarathkumar, richard hardy radhika sarathkumar, radhika age, radhika sarathkumar daughter name, radhika sarathkumar movies, ராதிகா சரத்குமார் வரலாறு, வசந்தபாலன், இயக்குநர் வசந்தபாலன், ஜீ5 வெப் சீரிஸ், தலைமை செயலகம், தலைமை செயலகம் வெப் சீரிஸ், ராதிகா சரத்குமார் தலைமை செயலகம்

இந்தியாவை பொறுத்தவரை இந்தி வெப் தொடர்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகின்றன. தெலுங்கிலும் ஒன்றிரண்டு கவனத்தை கவர்ந்தன. தமிழில் நவம்பர் ஸ்டோரி, விலங்கு என இப்போதுதான் முதல்படியை எடுத்து வைத்திருக்கிறோம். வசந்தபாலன் போன்றவர்கள் இதனை அடுத்தத் தளத்துக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Radhika, Tamil Cinema, Vasantha balan

அடுத்த செய்தி