தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தேசிய விருது வழங்கும் குழுவைச் சாடிய வசந்த பாலன்

தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமா ?

news18
Updated: August 12, 2019, 8:55 PM IST
தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தேசிய விருது வழங்கும் குழுவைச் சாடிய வசந்த பாலன்
இயக்குநர் வசந்தபாலன்
news18
Updated: August 12, 2019, 8:55 PM IST
தேசிய விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களும் தமிழ் கலைஞர்களும் புறக்கணிப்பட்டுள்ளனர் என்று இயக்குநர் வசந்தபாலன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. கன்னடா, மலையாளம், தெலுங்கு மொழிகளின் திரைப்படங்கள் பல தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், தமிழக திரைப்படங்களுக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை.

1992-ம் ஆண்டுக்குப் பிறகு, 26 ஆண்டுகள் கழித்து தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு விருதுகூட வழங்கப்படவில்லை. அது தமிழ் திரையுலகிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. மேலும், விருது வழங்கும் குழு மீது கடும் விமர்சனங்களும் எழுந்தது. தமிழ் திரைப்படங்களுக்கு உரிய பிரதிநிதி இல்லை என்று திரைப்பட வட்டாரத்திலிருந்து குரல்கள் எழுந்துவருகின்றன.

இதுகுறித்த ஆதங்கத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இயக்குநர் வசந்தபாலன், ‘தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமா ?

பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரைக் கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தனர். யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் என்ன குறை கண்டீர்கள் ? கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை. கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...