ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லவ் டுடே இந்தி ரீமேக்... ஹீரோ யார் தெரியுமா?

லவ் டுடே இந்தி ரீமேக்... ஹீரோ யார் தெரியுமா?

லவ் டுடே

லவ் டுடே

தமிழில் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிகர் வருண் தவான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இரண்டாவதாக இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த நவம்பரில் வெளியான இப்படம் 2022 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 தமிழ் படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. லவ் டுடே படத்தில் இவானா கதாநாயகியாக நடித்தார். நவீன கால காதல் கதையை மையப்படுத்தி இயக்கப்பட்ட இப்படம், பல தலைமுறை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிகமாகவும் வசூலித்தது. இதையடுத்து லவ் டுடே திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

'லவ் டுடே' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அஜித்தின் 'துணிவு' பட தயாரிப்பாளர்கள் பெரும் விலைக்கு வாங்கியுள்ளதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை எப்போதும் விரும்பும் வருண் தவான், பல தென்னிந்திய படங்களின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். அந்த வகையில், தற்போது 'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் பிரதீப் ரங்கநாதனே இந்தியில் இப்படத்தை இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்பது குறித்து தெரியவில்லை.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்றதையடுத்து லவ் டுடே திரைப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 7 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bollywood, Tamil Cinema