Home /News /entertainment /

Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

Beast: எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான் - பாலிவுட் நடிகர் வருண் தவான்!

வருண் தவான் - விஜய்

வருண் தவான் - விஜய்

பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலரை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலர் இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இதையடுத்து படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விஜய் கலந்துக் கொள்ளும் விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற சிறப்பு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவிருக்கிறது சன் டிவி.

    4 கார் இருக்கும் போது எதுக்காக சைக்கிள்ல போனீங்க? நெல்சன் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்!



    இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ’அதிரடியான #BeastHindiTrailer-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே வார்த்தையில் ஸ்ருதியை ஆஃப் செய்த தருண்! எதிர்பாராத ட்விஸ்ட்டில் மெளனராகம்...

    தவிர, விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி