பாலா ஸ்டைலில் வெளியான ‘வர்மா’ ட்ரெய்லர் - வீடியோ

வர்மா பட ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் படத்தின் ட்ரெய்லரில் பாலாவின் தனி ஸ்டைலை பார்க்க முடிகிறது.

news18
Updated: January 9, 2019, 7:08 PM IST
பாலா ஸ்டைலில் வெளியான ‘வர்மா’ ட்ரெய்லர் - வீடியோ
வர்மா ட்ரெய்லரிலிருந்து...
news18
Updated: January 9, 2019, 7:08 PM IST
வர்மா படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குநர் பாலாவுடன் இணைந்து இயக்குநர் ராஜுமுருகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ரீமேக் என்றாலும் தமிழில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் படத்தின் முதல் பாடலை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

தற்போது படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் படத்தின் ட்ரெய்லரில் பாலாவின் தனி ஸ்டைலை பார்க்க முடிகிறது. இந்தப் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.விஸ்வாசம் படத்திற்கான தடை நீங்கியது! அடிச்சுத் தூக்கும் தல ரசிகர்கள் - வீடியோ
Loading...
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...