பாலாவுக்கு பதிலாக கவுதம் மேனன்... தீவிரம் காட்டும் விக்ரம்?

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் படத்தை துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

news18
Updated: February 9, 2019, 9:45 PM IST
பாலாவுக்கு பதிலாக கவுதம் மேனன்... தீவிரம் காட்டும் விக்ரம்?
கௌதம் மேனன்
news18
Updated: February 9, 2019, 9:45 PM IST
நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிய ‘வர்மா’ படத்தை பாலா இயக்கியிருந்த நிலையில், இந்தப்படம் திரைக்கு வராது என்று பட நிறுவனம் அறிவித்தது.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்  ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனை தமிழில் பாலா இயக்கியுள்ளார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக இருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் பட ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதேகதை புதிய இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை நடிகர் விக்ரமின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலா இடத்தை வேறு யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் இயக்குநர் கவுதம் மேனன், பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், சோலோ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் நடித்து கொடுக்க வேண்டிய படத்தின் காட்சிகள் மீதமுள்ளது. இந்நிலையில் ‘வர்மா’ படத்தை கவுதம் மேனன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று விக்ரம் நினைப்பதாகவும், படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்மா சர்ச்சை... பாலாவை நீக்கியதன் பின்னணியில் விக்ரம்? - வீடியோ

First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...