ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதல் நாளிலேயே இணையத்தில் லீக்கான வாரிசு - துணிவு - அதிர்ச்சியில் படக்குழுவினர்

முதல் நாளிலேயே இணையத்தில் லீக்கான வாரிசு - துணிவு - அதிர்ச்சியில் படக்குழுவினர்

வாரிசு - துணிவு

வாரிசு - துணிவு

மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் படங்கள் வெகுவிரைவில் இணையத்தில் லீக்கானது அதிர்ச்சியான உண்மை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்கானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களை அவரவர் ரசிகர்கள் நன்றாக ரசித்து வருகின்றனர். தற்போது, 'துணிவு' மற்றும் வாரிசு' முழு படமும் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 'துணிவு' மற்றும் 'வாரிசு' தயாரிப்பாளர்கள், தங்கள் திரைப்படங்களை திருட்டுத் தனமாக வெளியிடும் இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதால், பல இணையதளங்களில் திருட்டுத் தனமாக பதிவேற்றம் செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் தடையையும் மீறி 'துணிவு' மற்றும் 'வாரிசு' இரண்டு படங்களும் திருட்டு தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது இந்தப் படங்கள் வெகுவிரைவில் இணையத்தில் லீக்கானது அதிர்ச்சியான உண்மை. அஜித்தின் ‘துணிவு’ படத்தின் கிளிப்பிங் சமீபத்தில் இணையத்தில் கசிந்ததையடுத்து, அது ரசிகர்கள் மத்தியில் பரவாமல் இருக்க தயாரிப்பாளர்கள் துரித நடவடிக்கையில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அஜித் மற்றும் விஜய் இருவரின் ரசிகர்களும் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நின்று, படங்கள் இணையத்தில் லீக்கானால் அது குறித்து புகாரளிக்கும்படி வேண்டுகோள் வைத்து வருகின்றனர். 'துணிவு' ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவானது என்றும், விஜய்யின் 'வாரிசு' படத்தின் பட்ஜெட் சுமார் 280 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

அஜித்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பாலிவுட் பிரபலம்!

இரண்டு படங்களும் முதல்நாளில் நல்ல வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Thalapathy Vijay, Thunivu, Varisu