அஜித் மற்றும் விஜய்க்கு பிரம்மாண்ட கட்டவுட் அமைத்து நெல்லை ரசிகர்கள் அசத்தியுள்ளனர். இருவருக்கும் ஒரே உயரத்தில், வியக்கும்படியான கட்டவுட் அமைத்திருப்பது சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் - விஜய் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. முன்னதாக 2014 - இல் பொங்கலையொட்டி அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய்யின் ஜில்லா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
இந்நிலையில் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி இரு உச்ச நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு படங்களும் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால், படம் வெளியாகக் கூடிய திரையரங்குகளில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் முதல் காட்சிக்கு வருவோருக்கு உணவு, ரத்த தானம் செய்வோருக்கு டிக்கெட் என இரு நடிகர்களின் ரசிகர்களும், படத்தின் ரிலீஸை திருவிழாவை போன்று கொண்டாடி வருகின்றனர்.
நெல்லையில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் அஜித் மற்றும் விஜய்க்கு பிரமாண்ட கட்டவுட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தியேட்டர் நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அஜித், விஜய் படங்கள் வியக்கும் வகையில் உள்ளன. இதனை இரு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ராம் முத்துராம் திரையரங்கம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு மற்றும் துணிவு படங்களிலிருந்து டிரைலர் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
துணிவு, வாரிசு படங்களின் அதிகாலை காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
இதையடுத்து இரு படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.
Idhu Nammaloda JILLA 😎#VarisuInRamCinemas #ThunivuInRamCinemas pic.twitter.com/TlfbRNeAcM
— Ram Muthuram Cinemas (@RamCinemas) January 10, 2023
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இதற்கிடையே வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.