10 வருடங்களுக்குப் பிறகு பிறந்தநாளில் வேலை செய்திருக்கிறார் நடிகர் விஜய்.
தளபதி விஜய்யின் புதிய படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டு, அவரின் பிறந்தநாளில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர். 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தை இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனது பிறந்தநாளான நேற்று விஜய், வாரிசு படப்பிடிப்பில் தனது பொழுதைக் கழித்ததாக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக தனது பிறந்தநாளில் ஓய்வெடுக்கும்
விஜய், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாளில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்றைய படப்பிடிப்புடன், வாரிசு படத்தில் இரண்டாவது ஷெட்யூலை முடித்திருக்கிறது படக்குழு. ”விஜய் தனது பிறந்தநாளில் படப்பிடிப்பில் ஈடுபட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. அவர் ஏற்கனவே வாரிசு படத்திற்கான தேதிகளை ஒதுக்கியிருந்ததாலும், இது ஷெட்யூலின் கடைசி நாள் என்பதாலும் புதன்கிழமை படப்பிடிப்பைத் தவிர்க்காமல் கலந்துக் கொண்டார்” என்றது நம்பத்தகுந்த வட்டாரம்.
வசூலில் சாதனைப் படைக்கும் கமல் ஹாசனின் விக்ரம்!
வாரிசு படத்தின் 45 சதவீத படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “அடுத்த ஷெட்யூல் ஜூலையில் தொடங்கும், செப்டம்பர் மாதத்திற்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட வீடு செட் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாம் படங்களில் பார்த்த பெரும்பாலான வீடுகளை விட அந்த வீட்டின் செட் பெரியது. வம்சியின் தோழாவில் இடம்பெற்றதை விட பெரிய செட்டாக இது இருக்குமாம்.
புதுப்பொண்ணு நயன்தாரா கையில் இப்படியொரு ரகசியமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாரிசு படத்திற்கு இன்னும் 2 பாடல் காட்சிகளை ஷூட் செய்ய வேண்டியிருக்கிறதாம். ஏற்கனவே விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இடம்பெறும் ஒரு பாடலை படக்குழுவினர் எடுத்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.