ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதை எதிர்பார்க்கலையே! 'வாரிசு' படத்தில் 'மாஸ்டர்' கனெக்சன் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதை எதிர்பார்க்கலையே! 'வாரிசு' படத்தில் 'மாஸ்டர்' கனெக்சன் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய்

விஜய்

தற்போது மாஸ்டர் படத்துக்கு பிறகு மாஸ்டர் தீம் இசையில் தளபதி விஜய் என டைட்டிலில் வரத்தொடங்கியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியிருக்கிறது நடிகர் விஜய்யின் வாரிசு. கடந்த சில வாரங்களுக்கு முன் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழில் விஜய் தான் நம்பர் 1 என கொளுத்திப்போட சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களே எழுந்தது. பிரபல தமிழ் திரை பிரபலங்கள் பலரும் தில் ராஜுவின் பேச்சைக் கண்டித்தனர். மற்றொரு பக்கம் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை சூர்ய வம்சம் வெற்றி விழாவிலேயே தெரிவித்திருந்ததாக பதிவு செய்தார். இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைகளுக்கு இன்று விடை தெரிந்துவிடும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் இன்று வெளியான துணிவு படமும், வாரிசு படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு என தொடங்கி இந்த பிரச்னை தொடர்ந்து சில வாரங்களுக்கு நீடிக்கும். கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஜில்லா மற்றும் வீரம் படங்களும் இதுபோலவே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இரண்டு படங்களும் வெற்றிப்படமாகவே அமைந்தது. அந்த நிலைதான் இப்பொழுதும் நடக்கும் என பலரும் கணித்துள்ளனர்.

அஜித் தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் தன்னை ஏகே அல்லது அஜித் குமார் என அழைத்தால் மட்டும் போதும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மற்றொருபக்கம் நடிகர் விஜய், மெர்சல் படத்துக்கு பிறகு இளைய தளபதியிலிருந்து தளபதியாக உயர்ந்திருக்கிறார். தளபதி விஜய் எனும் டைட்டிலில் வரும் ஸ்டைல் மட்டும் படத்துக்கு மாறிக்கொண்டே வந்தது. அண்ணாமலை படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ஒரே தீம் இசையுடன், ஒரே மாதிரியான ஸ்டைலில் வரும். தற்போது மாஸ்டர் படத்துக்கு பிறகு மாஸ்டர் தீம் இசையில் தளபதி விஜய் என டைட்டிலில் வரத்தொடங்கியிருக்கிறது. வாரிசு படத்திலும் அதே ஸ்டைலில் தான் டைட்டிலில் வருகிறது. இதனை வீடியோவாக பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என முழு என்டர்டெயின்மென்ட் படமாக வாரிசு உருவாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் தமன் இசையில் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu