இயக்குநர் அட்லியும் நடிகை பிரியாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இத்தம்பதி தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிக்க| வைரமுத்துவின் பேத்தி தமிழில் எடுத்த மார்க் என்ன தெரியுமா?
இந்த நிலையில் பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படு மாஸாக காட்சியளிக்கிறார்.
Thalapathy Vijay at Priya Atlee baby shower function
Antha Raja Nadai Style Thalaivaa #Varisu @actorvijay #Beast #Thalapathy67 pic.twitter.com/8ygMeK6q8E
— #Varisu சர்கார் முனாஃப் (@SARKAR_Munaf) December 20, 2022
'தளபதி 67' படத்துக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றிருக்கிறது. தற்போது அட்லி ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' பட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இப்படத்தில் தளபதி விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
'வாரிசு' பட இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. வாரிசுடன் 'துணிவு' படம் வெளியாவதால் அஜித் குறித்தும் துணிவு குறித்தும் விழாவில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்த ஷாம் ஒரு பேட்டியில் வாரிசுடன் துணிவு வெளியாவது குறித்து நடிகர் விஜய்யிடம் பேசியதாகவும், அதற்கு விஜய் வரட்டும்பா, அவரும் நண்பர் தானே என்று பேசியதாக தெரிவித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Atlee