Home /News /entertainment /

Varisu: ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு!

Varisu: ஆப் டெவலப்பராக விஜய்... எதிர்பார்ப்பை கிளப்பும் வாரிசு!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

Thalapathy Vijay: 'வாரிசு' படத்தில் விஜய் அப்ளிகேஷன் டெவலப்பராக நடிக்கிறாராம்.

    வாரிசு படத்தில் இதுவரை நடித்தீராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் விஜய். 

    தளபதி விஜய் அடுத்ததாக வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 'வாரிசு' படத்தில் இதுவரை ரசிகர்கள் பார்த்தீராத கேரக்டரில் விஜய் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    'வாரிசு' படத்தில் விஜய் அப்ளிகேஷன் டெவலப்பராக நடிக்கிறாராம். படத்தின் போஸ்டர்களில் விஜய் ஸ்டைலான லுக்கில் காணப்படுகிறார். சுவாரஸ்யமாக, அந்த போஸ்டர்களில் V ஹைலைட் செய்யப்பட்டிருந்தது. படத்தில் விஜய்யின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்று கூறப்படுவதால் தான் போஸ்டர்களில் அப்படி ஹைலைட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண காட்சிகள் Netflix-ல் விரைவில் ஒளிபரப்பு

    எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படும் வாரிசு படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். அதோடு பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, மற்றும் ஸ்ரீகாந்த் மேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் 'வாரிசு' படக்குழுவில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நேற்று ஹைதராபாத்தில் வாரிசு குழுவினருடன் இணைந்ததாக கூறப்படுகிறது.

    சிகிச்சை முடிந்து நாளை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்!

    தற்போது 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் இந்த ஷெட்யூல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வாரிசு படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி