Home /News /entertainment /

Thalapathy Vijay: விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

Thalapathy Vijay: விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

வாரிசு விஜய்

வாரிசு விஜய்

விஜய் தனது படங்களின் ஒன்றிரண்டு போஸ்டர்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துவிட்டு மற்ற நாட்களில் ஆஃப்லைனுக்கு சென்று விடுவார்.

    வாரிசு படத்தின் முதல் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    பிரபல தமிழ் நடிகராக இருந்த தளபதி விஜய், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஏனெனில் அவரது படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவிக்கின்றன. இந்த ஸ்டைலிஷ் நடிகருக்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர்கள் உள்ளனர்.

    தற்போது அவர் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.  இந்தப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகிறது.

    விஜய் மனைவி சங்கீதா விஜய்யின் தங்கையைப் பார்த்திருக்கிறீர்களா? ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே!

    தகவல்களின்படி, வாரிசு படத்தின் நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பு ஜூலை 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஜூலை 25-ஆம் தேதி வரை இந்த ஷெட்யூல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வாரிசு படத்தின் நடன இயக்குனர் ஒருவர் பிரபல இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.  தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரையும் உள்ளடக்கிய மற்றொரு பாடலின் முன்னோட்டம் படமாக்கப்பட்டுள்ளது, விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிங்கிள் சாங் பற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

    இதற்கிடையே ​​தளபதி விஜய் விரைவில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாக இருப்பதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. விஜய்க்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் இருந்தாலும், அவர் இன்ஸ்டாகிராமில் இல்லை.

    நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

    விஜய் தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் அரிதாகவே ஆக்டிவாக இருப்பார். தனது படங்களின் ஒன்றிரண்டு போஸ்டர்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துவிட்டு மற்ற நாட்களில் ஆஃப்லைனுக்கு சென்று விடுவார். ஆனால் அவரது திரைப்படங்களில் இடம்பெறும் விஜய்யின் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் சமூக தளங்களில் பட்டையைக் கிளப்பும். ஒருவர் விஜய்யின் வீடியோக்களைப் பார்க்காமல் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துவது மிகவும் கடினம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி