ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு விமர்சனம் : படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இசையமைப்பாளர் தமன்…

வாரிசு விமர்சனம் : படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இசையமைப்பாளர் தமன்…

விஜய் - தமன்

விஜய் - தமன்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் எமோஷனல் காட்சிகளைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது. வாரிசு படம் குறித்து விமர்சனங்கள் படக்குழுவில் இருந்து வெளிவராத நிலையில், தமனின் உருக்கமான ட்விட்டர் பதிவே, முதல் விமர்சனமாக பார்க்கப்படுகிறது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

வாரிசு திரையிடப்பட்ட திரையரங்குகள் திருவிழாக்கோலம் கண்டுள்ளன. முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், வாரிசு மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் குடும்பம் சார்ந்த கதையில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என முழு என்டர்டெயின்மென்ட் படமாக வாரிசு உருவாகி உள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் வாரிசு படத்தை பார்த்துவிட்டு அதன் இசையமைப்பாளர் தமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘விஜய் அண்ணா நீங்கள் இடம்பெற்ற உணர்வுபூர்வமான எமோஷனல் காட்சிகளை பார்த்தபோது, என் மனதிலிருந்து நான் அழுதேன். அந்தக் கண்ணீர் விலை மதிக்க முடியாதது.

‘வாரிசு படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு…’ – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இயக்குனர் வம்சி…

வாரிசு படம் என்னுடைய குடும்பம். அது என் மனதோடு மிக மிக நெருக்கமானது. இந்த படத்தில் பணியாற்ற வாய்ப்பை தந்த விஜய் அண்ணா, உங்களுக்கு நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Varisu