ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படக்குழுவுக்கு பெரும் சோகம்.. மாரடைப்பால் உயிரிழந்த புரொடக்‌ஷன் டிசைனர்

வாரிசு படக்குழுவுக்கு பெரும் சோகம்.. மாரடைப்பால் உயிரிழந்த புரொடக்‌ஷன் டிசைனர்

சுனில் பாபு

சுனில் பாபு

பிரபல புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலிடம் முன்னாள் இணை டிசைனராக பணிபுரிந்தவர் சுனில் பாபு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருக்கிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த டிசம்பர் 24-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த புதன் கிழமை வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகியது. படம் வரும் 11-ம் தேதி வெளியாகிறது.

பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

இந்நிலையில் வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனர் சுனில் பாபு கொச்சியில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். பிரபல புரொடக்‌ஷன் டிசைனர் சாபு சிரிலின் முன்னாள் இணை டிசைனரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பெரிய படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி, உருமி, கஜினி உள்ளிட்ட படங்களில் சுனில் பாபு புரொடக்‌ஷன் டிசைனராக பணிபுரிந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Varisu