Home /News /entertainment /

31 வருட இடைவெளியில் வாரிசைப் பெற்றெடுத்த வாரிசு தயாரிப்பாளர்!

31 வருட இடைவெளியில் வாரிசைப் பெற்றெடுத்த வாரிசு தயாரிப்பாளர்!

மனைவி, குழந்தையுடன் தில் ராஜு

மனைவி, குழந்தையுடன் தில் ராஜு

அப்பாவை 2-வது திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்திய ஹன்ஷிதா ஏதோ சிறுபிள்ளை என நினைத்து விடாதீர்கள்.

    வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு - வைகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது.

    2017-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக தில் ராஜு தனது முதல் மனைவி அனிதாவை இழந்தார். அவரது மகள் ஹன்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தவே, 2020-ல் வைகா ரெட்டி என்பவரை மணந்தார் தில் ராஜு. அப்பாவை 2-வது திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்திய ஹன்ஷிதா ஏதோ சிறுபிள்ளை என நினைத்து விடாதீர்கள்.

    விக்ரம் படத்துக்குப் பிறகு கமலுக்கு எல்லாமே வெற்றி தான்... இப்போது இன்னொரு சந்தோஷம்!

    31 வயதான ஹன்ஷிதாவுக்கு திருமணமாகி 5 வயதில் மகனும், 2 வயதில் மகளும் இருக்கிறார்கள். அப்பாவின் படத் தயாரிப்பு நிறுவன பணிகளை அவரும் கவனித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க, தில் ராஜுவின் 2-வது மனைவி வைகா ரெட்டிக்கு (வயது 33) நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தில் ராஜு - வைகா தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாரிசு படத்தைத் தவிர, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி ந்டிக்கும் படத்தையும் தில் ராஜு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி