Home /News /entertainment /

இதுவரை யாரும் வெளியிடாத வாரிசு படத்தின் அப்டேட்… மனம் திறந்த சரத்குமார்

இதுவரை யாரும் வெளியிடாத வாரிசு படத்தின் அப்டேட்… மனம் திறந்த சரத்குமார்

சரத்குமார் - விஜய்

சரத்குமார் - விஜய்

Varisu Movie : செப்டம்பரில் முழு படமும் முடிவடையும் என்று கூறப்படும் நிலையில், 2023 பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.

    விஜய் நடித்து வரும் வாரிசு படம் குறித்து, இதுவரை யாரும் வெளியிடாத அப்டேட்டுகளை நடிகர் சரத்குமார் அளித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இப்படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

    ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத் குமார் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    Sarath Chandran : பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்… ரசிகர்கள், திரைத்துறையினர் அதிர்ச்சி

    தெலுங்கில் மோஸ்ட் வான்டடாக இருக்கும் தமன் வாரிசு படத்திற்கு இசையமைக்கிறார். விஜய்யின் பிறந்த நாளையொட்டி வாரிசுபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

    இப்படம் குடும்பத்தை மையமாக கொண்ட கதை என்றும், முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் காட்சிகள் மற்றும் நல்ல பாடல்கள் அடங்கிய ஃபீல் குட் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் வாரிசு படத்தின் கதை குறித்து சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

    "பாப்புலாரிட்டி என்ற அளவீட்டில் பார்க்கும்போது விஜய்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். அவருடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாரிசு ஒரு பவர்ஃபுல்லான சப்ஜெக்ட். சுவாரசியமான கதை. இந்தப் படம் வெறும் குடும்பக்கதை என்று யார்சொன்னார்கள்?. வாரிசு படத்தைப் பொறுத்தவரையில் குடும்பம், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பக்கா பேம்லி என்டர்டெயின்மென்ட்டாக வாரிசு படம் உருவாக்கப்பட்டு வருகிறது. மனிதர்களிடையே இருக்கும் மதிப்புகளை வாரிசு கூறுகிறது என்று நினைக்கிறேன்"  என தெரிவித்தார்.

    Ajith Rifle Shoot Medals - துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கங்களை குவித்த அஜித் அணி… நாளை பரிசளிப்பு விழா

    படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் முழு படமும் முடிவடையும் என்று கூறப்படும் நிலையில், 2023 பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Sarathkumar

    அடுத்த செய்தி