வாரிசு படத்திலிருந்து 2ஆவது பாடல் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அப்டேட் வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
லோகேஷ் கனகராஜ் அழைப்பை நிராகரித்தாரா நடிகர் கார்த்திக்? தளபதி 67 அப்டேட்…
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
#Ranjithame hits 75M+ views now!!
THE BOSS strikes in style 🔥
📽️ https://t.co/Q56reRvcvc
🎵 https://t.co/gYr0tlcMmD#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @manasimm @AlwaysJani @TSeries #Varisu #VarisuPongal#RanjithameHits75M pic.twitter.com/TRfWYmG2uE
— Sri Venkateswara Creations (@SVC_official) November 30, 2022
2 நாட்களுக்கு முன்பாக வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டனர். முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.
#VarisuSecondSingle - #TheeThalapathy 🔥
THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal#30YearsOfVijayism pic.twitter.com/bpZIjNRLq4
— Sri Venkateswara Creations (@SVC_official) December 2, 2022
இந்நிலையில் அடுத்த பாடலாக ‘தீ தளபதி’ என்ற பாடல் நாளை மறுதினம் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அப்டேட் வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay