ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்'' - உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

''வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்'' - உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

உதயநிதி, தில் ராஜூ

உதயநிதி, தில் ராஜூ

Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். 

விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.  இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்,  அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் வெளியிடுகின்றனர்.  இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also read... பாலிவுட்டின் தோல்விக்கு கரண் ஜோஹர், ராஜமௌலி கூறும் காரணங்களும் தீர்வும்

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு மீடியாவிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து பேச சென்னை செல்கிறேன் என்று பேட்டியளித்து இருந்தார்.

அதன்படி நேற்று அவர் சென்னை வந்துள்ளார், காலை முதல் அவர் சென்னையில் உள்ளார்.  மேலும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Udhayanithi Satlin