ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தை வாங்கிய பிரபல ஓடிடி.. ரிலீசுக்கு முன்பே கையெழுத்தாகும் ஒப்பந்தம்.!?

வாரிசு படத்தை வாங்கிய பிரபல ஓடிடி.. ரிலீசுக்கு முன்பே கையெழுத்தாகும் ஒப்பந்தம்.!?

வாரிசு

வாரிசு

Varisu Movie | இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் நடித்து உள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 11 ம் தேதி 2023 திரை அரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே வாரிசு திரைப்படம் வெளியாகும். இதன்மூலம் துணிவு திரைப்படம் உடனான நேரடி மோதலை தவிர்க்கலாம் என்றும், டிக்கெட், தியேட்டர் என ரசிகர்களுக்கும் இது வாய்ப்பாகவே இருக்குமென கணிக்கப்படுகிறது.

  இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ள விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

  varisu firstlook poster, varisu meaning, varisu meaning in tamil, varisu release date, varisu music director, varisu movie, varisu cast, varisu story, varisu images, vijay varisu bike, varisu bike price, varisu bike details, வாரிசு பைக் விலை, வாரிசு விஜய், thalapathy vijay varisu, thalapathy vijay age, vijay 48, thalapathy vijay, thalapathy vijay birthday, vijay birthday, vijay birthday 2022, vijay birthday 2022, poster, vijay birthday celebration, vijay birthday poster, vijay birthday event, online vijay fans, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள்,
  வாரிசு திரைப்படம்

  இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். விரைவில் இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் OTT உரிமையை  அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தொலைக்காட்சி செயற்கைகோள் உரிமையை சன் டிவி வாங்கி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

  Read More: சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

   வாரிசு படத்தின் மூலம் தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார். மேலும் அவர் விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதாலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கிறார்.

   படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து வாரிசு படப்பிடிப்பு தளத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

  Read More: Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர்?

   பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.   அதற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்


  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay