Home /News /entertainment /

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்கை தாமதமாக பதிவிட்ட ஹீரோயின் ராஷ்மிகா… விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு…

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்கை தாமதமாக பதிவிட்ட ஹீரோயின் ராஷ்மிகா… விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு…

விஜய் - ராஷ்மிகா மந்தனா

விஜய் - ராஷ்மிகா மந்தனா

Varisu Rashmika Mandanna : விளம்பரம் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பதிவை ட்விட்டரில் ராஷ்மிகா வெளியிட்டார்.

    வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா 39 நிமிடங்கள் தாமதாக வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து, விஜய் ரசிகர்கள் ராஷ்மிகாவின் ட்விட்டர் பக்கத்தில் கமென்ட் செய்துள்ளனர்.

    படத்தின் ஹீரோ தளபதி விஜய், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 6.01-க்கு வெளியிட்டார். அதேநேரம் படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ராஷ்மிகா, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 6.40 மணியளவில் வெளியிட்டிருக்கிறார்.

    இதற்கிடையே, விளம்பரம் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பதிவை ட்விட்டரில் ராஷ்மிகா வெளியிட்டார். வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நேரத்தில் இப்படியொரு பதிவு தேவைதானா என்ற தொனியில் விஜய் ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு ரீப்ளை செய்தனர்.

    இதையும் படிங்க - பீஸ்ட் சாதனையை முறியடிக்குமா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? புயல் வேகத்தில் லைக் – ரீ ட்வீட்

    இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான தளபதி 66 படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இந்த படத்திற்கு வாரிசு அல்லது வெற்றி என்று பெயர் வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் வாரிசு என்பதை படக்குழுவினர் டைட்டிலாக வைத்துள்ளனர். இதிலிருந்து படம் பக்காவான குடும்பக் கதை என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க - தளபதி - தல கூட்டணியில் அடுத்த படம்? கோலிவுட்டில் உலாவரும் செய்தி!

    பல்வேறு திரையுலக பிரபலங்கள் தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக இன்னொரு அப்டேட் இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாரிசு படத்தில்,சரத்குமார், குஷ்பு, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்குகிறார்.

    பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் உருவாகும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி