ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் உடை, தாடி சரியில்லையா? பஞ்சாயத்தை கிளப்பிய இசையமைப்பாளர்! கொதிக்கும் வாரிசு ரசிகர்கள்!

விஜய் உடை, தாடி சரியில்லையா? பஞ்சாயத்தை கிளப்பிய இசையமைப்பாளர்! கொதிக்கும் வாரிசு ரசிகர்கள்!

விஜய் - ஜேம்ஸ் வசந்தன்

விஜய் - ஜேம்ஸ் வசந்தன்

பொது நிகழ்ச்சிகளுக்கு விஜய் நேர்த்தியாக வர வேண்டும் என்ற ஜேம்ஸ் வசந்தனின் கருத்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வழக்கமாக தனது பட நிகழ்ச்சிகளில் கோட் - சூட் அல்லது டிப்- டாப்பான உடைகளை விஜய் அணிவது வழக்கம். ஆனால், அதற்கு நேர்மாறாக வாரிசு இசைவெளியீட்டிற்கு எளிமையாக வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது. அதனைப் பார்த்த இசையமைப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பதிவில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

வாரிசு பட விழாவில் விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடையை அணிந்திருக்கலாம் என்று தோன்றியதாக குறிப்பிட்ட ஜேம்ஸ் வசந்தன், அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், பாமர ரசிகர் மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.

ஜேம்ஸ் வசந்தனின் கருத்து சரிதான் என்று சமூக வலைதளத்தில் பலர் கருத்திட்டனர். என்றாலும் விஜய் எப்படி வர வேண்டும் என்பது அவருடைய தனிப்படை விருப்பம், இதற்கு முன்பு மிக நேர்த்தியாக வந்தவர், இப்போது இப்படி வருவதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம், ரஜினியும் கூட எளிமையாகத்தான் விழாக்களுக்கு வருவார் என கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

First published:

Tags: Actor Vijay, Varisu