ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட இயக்குநர் வம்சியின் தந்தை..!

வாரிசு படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட இயக்குநர் வம்சியின் தந்தை..!

கட்டி அணைத்து நெகிழ்ந்த வம்சியின் தந்தை

கட்டி அணைத்து நெகிழ்ந்த வம்சியின் தந்தை

vamshi paidipally Emotional Video | அப்பா ‘வாரிசு’ படத்தைப் பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் வம்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட இயக்குநர் வம்சியின் தந்தை..!வாரிசு படத்தை பார்த்து இயக்குநர் வம்சியின் தந்தை அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விடும் உருக்கமாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நேற்று தெலுங்கில் வெளியானது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் வம்சியின் தந்தை வாரிசு படத்தைப் பார்த்து கண்கலங்கியபடியே அவரை கட்டியணைக்கிறார்.  இந்த உணர்ச்சிமிகு தருணத்தை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் வம்சி. அதில் இன்று எனது அப்பா ‘வாரிசு’ படத்தைப்பார்த்து நெகிழ்ந்ததே எனது மிகப்பெரிய சாதனை; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் தருணம் இது. நீங்கள் தான் என் ஹீரோ.. லவ் யூ அப்பா” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu