Home /News /entertainment /

Varisu: விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

Varisu: விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

வாரிசு

வாரிசு

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய்யின் வாரிசு படத்தில் நடிப்பதில் தான் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுடன் சர்தார் வேடத்தில் நடித்து பிரபலமானார். கடினமான போலீஸ் அதிகாரியாக உன்னை போல் ஒருவன், சித்தார்த்துடன் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

    தற்போது அவருக்கு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் விஜய்யுடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளார் கணேஷ். இதையடுத்து தனது மேக்கப் அறையில் இருந்து ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்த கணேஷ் வெங்கட்ராம், "விஜய் சாருடன் "வரிசு" படத்தில் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மேக்கப் நேரம்!!" எனப் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அருண் விஜய்யின் சினம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!



     




    View this post on Instagram





     

    A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh)





    இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தை வம்ஷி பைடிப்பள்ளி எழுதி இயக்குகிறார். படம் 2022 தீபாவளி அல்லது 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும். விஜய் தவிர, படத்தில் ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த் மற்றும் சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி