ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவை டிவியில் எப்போது பார்க்கலாம்?

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழாவை டிவியில் எப்போது பார்க்கலாம்?

விஜய்

விஜய்

Varisu Vijay விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ் தான் இந்தப் படத்துக்கு வில்லன் என சீக்ரெட்டை வெளியிட்டது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு தற்போது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது. பிரபலங்கள் ஒவ்வொருவரும் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர். ஆனால் விழாவில் கலந்துகொண்டவர்களைத் தவிர மற்ற ரசிகர்கள் பிரபலங்களின் பேச்சைக் கேட்க முடியாததால் சோகத்தில் இருக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வாரிசு இசை வெளியீட்டு விழா விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் எப்போது என்று அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழா சன் டிவியில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அன்றைய தினம் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பது உறுதி. அந்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், தமன் போன்ற பிரபலங்கள் பேசிவருகிறார்கள். விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ் தான் இந்தப் படத்துக்கு வில்லன் என சீக்ரெட்டை வெளியிட்டது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu