மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தார் என அப்படத்தின் வெளியீட்டாளர் லலித் குமார் கூறியுள்ளார்.
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில், வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் தயாரிப்பாளர் லலித்குமார் கலந்துகொண்டு, விஜய் குறித்த சில விஷயங்களை நினைவு கூர்ந்தார். இவர் விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
விழாவில் பேசிய லலித்குமார், மாஸ்டர் திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க; “90களில் எனக்கு ஒரு போட்டியாளர் இருந்தார்..” விஜய் சொன்ன அந்த நடிகர் யார்?
அந்த சமயம் ஓடிடியில் இருந்து மாஸ்டர் படத்துக்கு பெரிய ஆஃபர் வந்தது. இந்த தகவலை நானும், விஜய்யின் மேலாளர் ஜெகதீஷூம் அவரிடம் கூறினோம். அதற்கு மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில்தான் வரவேண்டும். திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாம்தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறினார்” என தெரிவித்தார்.
மேலும் கொரோனா சூழலில் வெளியான போதும் மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததாக லலித்குமார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் சுமார் 500 திரையரங்குகளில் லலித்குமார் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.