ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘வாரிசு’ பட தயாரிப்பாளர் குழந்தையுடன் நடிகர் விஜய்… க்யூட் ஃபோட்டோ வைரல்!

‘வாரிசு’ பட தயாரிப்பாளர் குழந்தையுடன் நடிகர் விஜய்… க்யூட் ஃபோட்டோ வைரல்!

தில் ராஜு குழந்தையுடன் விஜய்

தில் ராஜு குழந்தையுடன் விஜய்

நவம்பர் முதல் வாரத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கம் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் திரு ராஜு தயாரிக்கிறார். இதற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நிலையில் இறுதியாக சென்னையில் நடைபெற்ற வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

  மேலும் அந்த புகைப்படத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு அமர்ந்திருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தயாரிப்பு நிறுவனம் வேகப்படுத்தியுள்ளது.

  கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற டி.இமான்

  வாரிசு படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகாமந்தனா, சரத் குமார், பிரகாஷ்ராஜ்,  பிரபு, குஷ்பு, ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படத்திலிருந்து 3 போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் கடந்த வாரம் புதிய ஸ்டில்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன், வாரிசு படத்தின் ஒவ்வொரு பாடலையும் ஃபேன் பாயாக கம்போஸ் செய்துள்ளார் என்று இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.

  மினுமினுக்கும் முத்தாரமே! மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

  நவம்பர் முதல் வாரத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலையொட்டி வாரிசு வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வருவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay, Pongal